ஷ்ரத்தா கபூரின் காதலை ஏற்க மறுத்த பிரபல நடிகர்..
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர்.
இவர் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார்.
இப்படத்தை தொடர்ந்து ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் து ஜூதி மைன் மக்கார்எனப் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷ்ரத்தா கபூர், நான் 8 வயதில் இருக்கும் போது வருண் தவான் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் அவரிடம் காதலை கூறியிருக்கிறாராம். இதை கேட்ட வருண் தவான் நோ சொல்லிவிட்டாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.