இந்த ஒரு காரணத்திற்காக சம்பளத்தை உயர்த்தினாரா கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அடுத்து அவர் கைவசம் நான்கு படங்கள் வைத்து இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் கண்ணிவெடி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார்.
அறிமுக இயக்குனர் கணேஷ் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜர்னலிஸ்ட் ஆக நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இதுவரை ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அதை 3 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.
அவர் அடுத்து பாலிவுட்டில் நுழைவதால் இப்படி சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது. அட்லீயின் ஹிந்தி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
