வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

ஜனநாயகன்

பல தடைகளை தாண்டி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை கடந்து சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது ஜனநாயகன்.

வசூல் வேட்டை ஆரம்பம் 

வருகிற ஜூலை 24-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் UK-வில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது.

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் | Jana Nayagan Movie Pre Booking Collection Starts

இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 1.25 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவில் தனது வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன், ரிலீஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News