இயக்குனர் ஹரியின் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- கடும் துக்கத்தில் குடும்பம்.
தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஹரி.
அதன்பிறகு அவர் இயக்கிய சாமி, கோவில், அருள், சிங்கம் என பல படங்கள் வெற்றியை கண்டுள்ளது. கடைசியாக அவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க யானை திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து ஹரி விஷாலை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.
கடந்த சில கடந்த சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஹரியின் தந்தை திரு.வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.
அவரது உடல் 2 மணி வரை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் வீட்டில் வைக்கப்படுமாம். பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளதாம்.