என்னுடைய மேனேஜர்கள் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள்.. ஜிவி பிரகாஷ் பட நடிகை வேதனை!!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஷாலினி பாண்டே. இவர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஷாலினி பாண்டே,"அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது, என்னை நிறைய பேர் உடல் கேலி செய்தார்கள். அப்போது நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன்.
மேலும் என் மேனேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாகப் பயன்படுத்தி சில படங்களில் நடிக்கச் சொல்லி ஏமாற்றினர். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் மட்டும் தான்" என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.