ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் பிரபலங்களின் ஒருவர் ஈரோடு மகேஷ் என்பதும் குறிப்பாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான இவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு போட்டியாளர்களிடமுள்ள பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை மிகச் சரியாக கணித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஈரோடு மகேஷ் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஸ்ரீதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு அமிழ்தா என்ற ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரையை ஆகியவற்றில் படிப்படியாக வளர்ந்து வரும் ஈரோடு மகேஷ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காருடன் தனது மனைவி மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES