கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட திரையரங்கம் - ஓடிடி யில் வெளியாகும் படங்கள்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிரடியாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதில் ஒன்றாக தமிழகத்தில் அணைத்து திரையரங்கமும் மூடிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கண்கூடாக தெரிகின்றது.
ஆம் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’, திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' உள்ளிட்ட படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக காத்துருக்கிறது.