கோட் இத்தனை கோடிகள் நஷ்டமா...ஆல் டைம் நஷ்டமாக அமைந்த விஜய் படம்
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் கோட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனால் இப்படத்திற்கு தமிழகம் தாண்டி பல ஊர்களில் பெரிய வரவேற்பு என்பதே இல்லை. இந்நிலையில் கோட் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா பகுதிகளில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
தற்போது இப்படம் தமிழகத்தில் 200 கோடிகள் வரை வசூல் செய்து மெகா ஹிட் ஆனாலும், ஆந்திரா, தெலுங்கானாவின் சுமார் 14 கோடிகள் வரை இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.
அதே போல் கேரளாவில் இப்படம் ரூ 10 கோடிகள் வரை நஷ்டத்தை சந்திக்க, ஆல் டைம் அதிக நஷ்டம் என்ற மோசமான சாதனையை அந்த ஏரியாக்களில் இந்த படம் பெற்றுள்ளது