ஜிவி பிரகாஷை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை கேட்டிருக்கிறேன்!! நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்..

ஜிவி பிரகாஷை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதை கேட்டிருக்கிறேன்!! நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்..

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் ஐடியில் யாரை பின் தொடர்ந்து இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரேஷ்மா, ஜிவி பிரகாஷ் ஐடியை தான், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் ஒரு படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன். 

வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்த போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். சமீபத்தில் இன்ஸ்டாவில் போட்ட புகைப்படத்திற்கு ஃபயர் கூட விட்டிருக்கிறேன்.

அவர் படமும் பண்ணுகிறார், பாட்டும் பண்ணுகிறார், பாடுகிறார், அவர் கூட நடித்த நடிகைகள் ஹிட்டாகிவிடுகிறார்கள். நான் அவரிடம் சொன்னேன், என்னை உங்கள் படத்தில் நடிக்க வையுங்கள், ஏன் என்னை சகோதரி ரோலில் நடிக்க வைக்கிறீர்கள் என்று ரேஷ்மா கேட்டதாக கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES