பெயர் மாற்றமா? - நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி-யில் வெளியானது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் திரிஷா என்பதற்கு பதிலாக ‘த்ர்ஷா’ என்று போட்டு இருந்தார்கள். இதை வைத்து நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக பேசப்பட்டது.
இதுபற்றி நடிகை திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு அவசியமில்லை. ‘திரிஷா’ என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று அவர் கூறினார்.