ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷ டேட்டிங்.. காதலனுடன் ஆடுகளம் பட நடிகை திருமணம்.. யாருன்னு பாருங்க..!
முதலில் எல்லாம் நடிகர்கள், நடிகைகள் காதலிக்க துவங்கி விட்டால் அந்த தகவல் அரசல் புரசலாக வெளிவர ஆரம்பித்து விட்டாலே, அவர்கள் மானம் கப்பல் ஏறுவதற்குள் திருமணம் செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விடுவர்.
அதுதான் முதலில் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் லிவிங் ரிலேசன்ஷிப்பில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டு ஹாய் சொல்லி பிரிந்து விடுகின்றனர்.
ஆனால் இதில் நடிகை டாப்சி மாறுபட்டு, பல ஆண்டுகள் டேட்டிங் செய்த தனது காதலரையே திருமணம் செய்வது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்சி. மாடலிங் துறையில் இருந்தவர், பிறகு சாப்ட்வேர் துறையில் இருந்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2 , வந்தான் வென்றான், வலை, கேம் ஓவர், ஆரம்பம், டங்கி உள்ளிட்ட படங்களில் டாப்சி நடித்திருக்கிறார். இதில் ஆடுகளம் படத்தில், ஆங்கிலோ இந்திய பெண்ணாக அவரது நடிப்பு அதிகளவில் ரசிகர்களை கவனத்தை ஈர்த்தது.
வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
தமிழில் போதிய வரவேற்பை பெறாத டாப்சி, மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம் பக்கம் சென்றார். அங்கும் பெரிய ஆதரவு கிடைக்காத நிலையில், பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு தாராள கவர்ச்சியை அவிழ்த்து விட்டார். இப்போது 3 படங்களில் பாலிவுட் நடிகை டாப்சி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இப்போது 36 வயதுகளை கடந்துள்ள பிரபல நடிகை டாப்சிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இவர் தனது நீண்ட கால காதலரை மணம் முடிக்க இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.
ஆனால் டாப்சி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், தனது காதலர் மத்தியாஸ் ஃபோ என்பவரை இந்த மாதம் திருமணம் செய்ய இருப்பதாக பாலிவுட் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வந்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் உதய்பூரில் நடக்க இருப்பதாகவும், இதற்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷங்களாக டேட்டிங்.. காதலனுடன் டாப்சி திருமணம் விரைவில் உதய்பூரில் நடக்க இருக்கிறது.