விபச்சார விடுதியில் அந்த பெண் சொன்ன ஒரு வார்த்தை.. நொறுங்கிவிட்டேன். மிருணாள் தாகூர் வேதனை..!
தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை மிருணாள் தாகூர். கடந்த 2018ம் ஆண்டில் லவ் சோனியா என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானவர். அதற்கு முன் நிறைய டிவி தொடர்களில் நடித்திருக்கிறார்.
வரலாற்று திரைப்படங்களான சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு மொழியில் அவர் நடித்த சீதாராமம் படம் பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. கல்லன் கோரியா போன்ற இசை ஆல்பங்களிலும் மிருணாள் தாகூர் இடம்பெற்றிருக்கிறார்.
சில நடிகர்கள், நடிகைகள் குறிப்பிட்ட கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்கும் போது, தங்களது நடிப்பில் அந்த இயல்பு தன்மை வரவேண்டும் என்பதற்காக, உண்மையில் அப்படி இருப்பவர்களை, அந்த தொழில், வியாபாரம் செய்பவர்களை கவனித்து அவர்களது மேனரிஷங்களை தங்களது நடிப்பில் கொண்டு வருவர்.
நடிகர் சிவாஜி கணேசன், தான் பார்க்கும் மனிதர்கள், தன்னிடம் பழகும் மனிதர்களிடம் இருந்து சில மேனரிஷங்களை எடுத்து தனது கேரக்டரில் வெளிப்படுத்துவார். கமல்ஹாசனிடமும் அந்த பழக்கம் உண்டு.
அப்படி நடிகை மிருணாள் தாகூர், அவர் நடிக்கும் கேரக்டருக்காக இந்த ரிஸ்க் ஆன விஷயத்தில் இறங்கியிருக்கிறார்.
இதுகுறித்து மிருணாள் தாகூர் கூறியிருப்பதாவது, ஒரு படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக விபச்சார விடுதிகளில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்.
அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது எப்படி நடிக்க வேண்டும் போன்ற விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக விபச்சார விடுதி ஒன்றுக்கு சென்று இருந்தேன்.
அங்கிருந்த பல பெண்களை சந்தித்தேன் குறிப்பாக ஒரு பெண்ணின் அறைக்கும் சென்றேன். அப்பொழுது அவர்களுடைய கட்டில் உயரமாக இருந்தது. எதற்காக கட்டில் இந்த அளவுக்கு உயரமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினேன்.
நான் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் போது கட்டில் அடியில் தான் என்னுடைய குழந்தையும் கணவரும் இருப்பார்கள் என கூறினார்.
அவர் அப்படி கூறியதைக் கேட்டதும் நான் நொறுங்கிவிட்டேன். அந்த வேதனையையும் சிரித்துக் கொண்டுதான் கூறினார். இவ்வளவு கஷ்டமான விஷயத்தை சிரித்துக் கொண்டே கூறுகிறீர்களே என்று கேட்டேன்.
அதற்கு அவர் எங்களிடம் எந்த உணர்ச்சியும் கிடையாது. அழுவதற்கு என எங்களுக்கு எந்த வலியும் கிடையாது,. எல்லாம் பழக்கமாகிவிட்டது. நாங்கள் ஒரு உயிருள்ள பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வேதனை சோகம், துக்கம் இவை எல்லாம் எங்களை விட்டு மறைந்து போய்விட்டது என சிரித்தபடி கூறினார்.
இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் தான் நாம் நடிக்க போகிறோமா..? என்று அழுது கொண்டு வீட்டுக்கு சென்றேன் என பதிவு செய்திருக்கிறார் மிருணாள் தாகூர்.
விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளி பெண் சொன்ன உயிருள்ள பிணமாகத்தான் வார்த்தையால், நொறுங்கிவிட்டேன் என்று மிருணாள் தாகூர் வேதனையை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.