‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராக உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு கடந்த வாரமே பூஜை போடப்பட்டாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு பின் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

விஜய்

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் நடத்த உள்ளனர்.

விஜய்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்தப் படம் தயாராக உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES