ச்சீ.. இப்படி தான் பொண்ணுங்கள பார்ப்பீங்களா... நெட்டிசனை விளாசும் விஜே பார்வதி.
இன்ஸ்டாகிராமில் மோசமாக கமெண்ட் செய்த பயனரை விஜே பார்வதி திட்டியுள்ளார். இந்தியா - மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் விஜே பார்வதி, இவர் மீடியாத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றினார்.
இதனை தொடர்ந்து ஆர்ஜேவாக பணியாற்றி வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பார்வதி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்.
தற்போது பிரபல யூடியூப் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது வதந்தியாக போய் விட்டது.
மாறாக தன்னுடைய வேலை ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் குட்டை கவுன் அணிந்து தொடை தெரியும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் முகம் சுழிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
கமெண்ட்டுகளை பார்த்த பார்வதி பதிலடி கொடுக்காத காரணத்தினால் தற்போது அவ பேச்சிகள் அதிகமாக விட்டது.
பொறுமையிழந்த பார்வதி மோசமாக கமெண்ட்டுகளை பதிவு செய்த பயனர் ஒருவரை “ ச்சீ... இப்படியா பொண்ணு கிட்ட பேசுவீங்க..” என கடுப்பாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
கமெண்டை படித்த மற்ற இணையவாசிகள், பார்வதிக்கு சார்பான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.