இதை பார்க்கும்போதெல்லாம் என் இதயம் புன்னகைக்கும்: சமந்தா எடுத்த செம புகைப்படங்கள்!

இதை பார்க்கும்போதெல்லாம் என் இதயம் புன்னகைக்கும்: சமந்தா எடுத்த செம புகைப்படங்கள்!

பிரபல நடிகை சமந்தா தற்போது காஷ்மீரில் விஜய்தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் காஷ்மீரின் கொள்ளை அழகு புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’குஷி’. விஜய்தேவரகொண்டா, சமந்தா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் படத்தில் சமந்தா மற்றும் விஜய்தேவரகொண்டா நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா ஏற்கனவே பதிவு செய்துள்ள நிலையில் சற்று முன் காஷ்மீரின் கொள்ளை அழகு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ’நான் காஷ்மீர் பற்றி எப்போது நினைத்தாலும் இந்த புகைப்படங்களால் என் இதயம் புன்னகைக்கும்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES