ஒரே வீட்டில் தீபாவளிக் கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா: வைரலாகும் போட்டோ!
நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஒரே வீட்டில் வசித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒன்றாக தீபாவளி கொண்டாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தேவரகொண்டா தான்.
‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து அவருக்கு பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.
இந்நிலையில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் சேர்ந்து நடித்த நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் ஒன்றாக தீபாவளிக் கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். விஜய் தேவரகொண்டா கைக் கோரத்தப்படி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, விரைவில் தெரிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
ஆகவே இப்புகைப்படத்தில் இருப்பதும் ஒரே வீட்டில் இருப்பதாகவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.