'காலம் ஒரு துரோகி': நயன்தாராவின் ரத்தம் சொட்டும் புரமோ வீடியோ

'காலம் ஒரு துரோகி': நயன்தாராவின் ரத்தம் சொட்டும் புரமோ வீடியோ

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கவில்லை என்றாலும் ஒரு திரைப்படத்தின் புரமோ வீடியோவில் நடித்துள்ள நிலையில், அந்த வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

வசந்த் ரவி, பாரதிராஜா உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’ராக்கி’. இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ’காலம் ஒரு துரோகி’ என்ற புரமோஷன் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா ரத்தம் சொட்டச்சொட்ட நடித்திருக்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையில், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES