கவின் - நயன்தாரா நடிக்கும் ஹாய்.. சூப்பர் ட்ரெய்லர் வெளியானது.. அட நல்லாருக்கே ப்பா
சென்ன: கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹாய். இதனை விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார்.முதலில் ஆக்ஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் 28ஆம் தேதிக்கு தள்ளி போயிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். சிவகார்த்திகேயன் மாதிரி இவரும் முதலில் சின்னத்திரையிலிருந்துதான் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். அவர் நடித்த சில சீரியல்கள் அவருக்கு தமிழ்நாட்டு குடும்பங்களிடையே நல்ல கனெக்ட்டை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே விளையாடினார். ஆனால் டைட்டில் வெல்ல முடியவில்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட் கதவுகள் அவருக்கு நம்பிக்கையோடு திறந்தன.

ரைசிங் ஸ்டார் கவின்: அந்தவகையில் அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவரது கேஷுவலான நடிப்பு பெயர் வாங்கியது. அதனையடுத்து நடித்த டாடா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து அவர் நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர், மாஸ்க் ஆகிய படங்கள் சரியாக போகாவிட்டாலும் அந்தப் படங்களின் கதைகளும், கவினின் நடிப்பும் பெரிய பெயரை பெற்று விமர்சன ரீதியாக பாசிட்டிவ்வாகவே அமைந்தன.
நயனுடன் ஹாய்: இப்போது அவர் நயன்தாராவுடன் ஹாய் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை லோகேஷ் கனகராஜின் உதவியாளரான விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார். முதன்முறையாக நயனுடன் கவின் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க நம்பிக்கையை வைத்திருக்கிறார். மேலும் இப்படம் இளைஞர்களையும், குடும்பத்தினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தொடர்ந்து கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.
தள்ளிப்போன ரிலீஸ்: இப்படமானது கடந்த 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ரிலீஸ் 28ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. அதேசமயம், 14ஆம் தேதி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானதால்தான் ஹாய் படம் தள்ளிப்போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. சூழல் இப்படி இருக்க இன்று ஹாய் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஹாய் ட்ரெய்லர் ரிலீஸ்: அதன்படி இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் இது காதல் கதையாகவே தோன்றுகிறது. அதேசமயம் விஷ்ணுவின் மேக்கிங் கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்துவிடும் என்ற நம்பிக்கையையும் கவின் ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள். இதில் கவின் மயில்சாமி என்ற கேரக்டரிலும், நயன்தாரா தேவயானி என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாக்யராஜ், பிரபு உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.