சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு குறிவைத்த பீட்டர்! கார்த்திகை தீபம் சீரியலில் அதிர வைக்கும் சதி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்தத் தொடரில் தினமும் பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், நவம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தப்பட்டுள்ள பேஸ்மேக்கர் தொடர்பாக கார்த்திக்கிற்கு ஏற்கனவே சந்தேகம் இருந்து வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கும் கார்த்திக், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவருக்கு எதற்காக பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்ற கேள்வியால் மேலும் அதிர்ச்சியடைகிறார்.
இதற்கிடையில், வீட்டிற்கு வரும் பீட்டரை சாமுண்டீஸ்வரி வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறார். இதனால் சந்தேகமடையும் கார்த்திக், ரேவதியிடம் பீட்டரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ரகசியமாகப் பெற்றுத் தருமாறு கேட்கிறார்.
மறுபுறம், பீட்டர் தனது லேப்டாப்பில் உள்ள பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்தி சாமுண்டீஸ்வரியின் பேஸ்மேக்கரை ஹேக் செய்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது.
மேலும், சாமுண்டீஸ்வரி உயிரிழந்தால் அது இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையாகவே கருதப்படும் வகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது.
இவ்வாறு சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பீட்டரின் சதியை கார்த்திக் முன்கூட்டியே கண்டுபிடிப்பாரா? சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.