ரியோ நடிக்கும் ராம் இன் லீலா.. வெளியானது ட்ரெய்லர்.. அட சூப்பரா இருக்கே பாஸ்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா.. வெளியானது ட்ரெய்லர்.. அட சூப்பரா இருக்கே பாஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரியோ ராஜ். கடைசியாக அவர் நடித்திருந்த ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்போது ராம் இன் லீலா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மாதம் 21ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து கலை பயணத்தை ஆரம்பித்த ரியோ ராஜ் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த அவர் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் ஆகியவைகளிலும் கலந்துகொண்டார். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் லீட் ரோலில் நடித்து ஹீரோ பயணத்தை தொடங்கினார்.

Rio Raj s Ram in Leela Trailer Creates Buzz A Promising Follow-Up to Aan Paavam Pollathathu

நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த ஜோ: அவர் நடித்த படங்களில் ஜோ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த நிறம் மாறும் உலகில் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இருப்பினும் இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதையும் கவனிக்க வேண்டும்.

ஆண் பாவம் பொல்லாதது: இப்படிப்பட்ட சூழலில்தான் கலையரசன் இயக்கத்தில் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன்தான் திரைக்கதையும் வசனமும் எழுதியிருந்தார். படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றது. முக்கியமாக ஆண்களின் வலியை எந்த சமரசமும் இல்லாமல் காண்பித்திருக்கிறார்கள் என்ற பாராட்டையும் ஆண்கள் மத்தியில் அந்தப் படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராம் இன் லீலா: இத்தனை வருடங்கள் கடுமையாக உழைத்ததற்கான பலனை அந்தப் படம் ரியோவுக்கு கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படம் கொடுத்த ஹிட்டை அடுத்தடுத்த படங்களிலும் அவர் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், அவர் ராம் இன் லீலா படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ராமச்சந்திரன் கண்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் மாளவிகா அவினாஷ், சேத்தன், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் 21ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

வெளியான ட்ரெய்லர்: இப்படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில்; தற்போது ட்ரெய்லர் வெளியாகி சென்சேஷனல் ஆகியிருக்கிறது. திருமணம் செய்துகொள்ள ஒரு ஆண் படும் பாடு உள்ளிட்ட விஷயங்கள் இப்படத்தில் பேசபப்ட்டிருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. குடும்ப ரசிகர்கள் கொண்டாடும்படியான பல அம்சங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக ஆண் பாவம் பொல்லாதது மாதிரி இதுவும் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் ரியோவும் அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள்.
 

LATEST News

Trending News