ஹாலிவுட்டுக்கே சவால் விடும் ராமாயணா.. டிரெய்லர் திடீர் தாமதம்.. பின்னணியில் உள்ள மெகா காரணம் என்ன?

ஹாலிவுட்டுக்கே சவால் விடும் ராமாயணா.. டிரெய்லர் திடீர் தாமதம்.. பின்னணியில் உள்ள மெகா காரணம் என்ன?

சென்னை: இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரெண டிரெய்லர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், டிரைலரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமாயணா: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ராமாயணம்' படத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள். ராமாயணத்தை உலகத்திற்குக் கொண்டு செல்லும் எனது கனவு, சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனதன் மூலம் நிஜமாகியுள்ளது. இதன் காரணமாக, படத்தின் டிரெய்லரை உலகளவில் சற்று தாமதமாக வெளியிட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், ஹாலிவுட் படங்களைப் போல உலகமே வியக்கும் வகையில் 'ராமாயணம்' திரையிடப்பட இருப்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். நமது கலாச்சாரத்தின் செழுமையை உலக மக்கள் பெருமதித்துடன் காண வழிவகுக்கும் என்றார்.
Ramayana Trailer

4,000 கோடி பட்ஜெட: நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல், யாஷ் மற்றும் ரவி துபே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு குமார் விஸ்வாஸ் பாடல்களை எழுதியுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதாவாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோர் அனுமனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ராகவன் கதை எழுதியுள்ள இந்தப் படம், இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமானதாக சுமார் 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் பிரம்மாண்டப் படத்தை நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்த இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டும் திரைக்கு வரவுள்ளது.
 

LATEST News

Trending News