ஐடி கார்டை காட்டு.. சூர்யா பட ஹீரோயினை திணறவிட்ட காவலர்! வீடியோ வைரல்.
ஹிந்தி நடிகை திஷா பாட்னி தமிழ் சினிமாவில் கங்குவா படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்று காட்சிகள் உடன் எடுக்கப்பட்டு வருகிறது.
திஷா பாட்னிக்கு கங்குவா படத்தில் சண்டை காட்சிகள் உட்பட அதிக முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.
திஷா பாட்னி சமீபத்தில் மும்பை விமான நிலையம் சென்றபோது அவரை உள்ளே விடாமல் பாதுகாவலர் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
அவரது ஐடி கார்டை காட்டினால் தான் உள்ளே விடுவேன் என அவர் கூறிவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் நடிகை திணறிவிட்டார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.