எப்போதும் புடவையில் கலக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணனா இது- மாடர்ன் லுக்கில் அசத்தும் பிரபலம்...
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன், இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன்.
அதன்பின் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு தாலி கட்டு, சிவப்பு தாலி என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.
பிஸியாக நடித்துக்கொண்டு வந்த இவர் நடிகர் பொன்வண்ணனை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
படங்களில் பிஸியாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்தும் வருகிறார்.
இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் உலா வருகிறார்.
எப்போதும் புடவையில் நடிக்கும் சரண்யா வெளிநாட்டில் மாடர்ன் டிரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சரண்யாவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.