ஒரே சைகைதான் சைலண்ட்-ஆன ரசிகர்கள்!! திருப்பதியில் அஜித் குமார் செய்த செயல்..

ஒரே சைகைதான் சைலண்ட்-ஆன ரசிகர்கள்!! திருப்பதியில் அஜித் குமார் செய்த செயல்..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி துப்பாக்கிச்சூடு, கார் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் தன்னை ஈடுப்படுத்தி தன் திறமையை நிரூபித்து வருகிறார்.

துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித் பல போட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தினை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2வது முறையாக இணையவுள்ளார்.

ஒரே சைகைதான் சைலண்ட்-ஆன ரசிகர்கள்!! திருப்பதியில் அஜித் குமார் செய்த செயல்.. | Actor Ajith In Tirupathi Fans Shoud Thala React

இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினரும் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்த அஜித், தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்த ரசிகர்கள் அஜித்தை கண்டு தல, தல என்று கூச்சலிட்டனர்.

அப்போது ரசிகர்களை பார்த்து இது கோவில் அமைதியாக இருக்குமாறு கையசைத்து சைகை காட்டினார். உடனே ரசிகர்களும் அமைதியாகினர். குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News