தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்: காயத்ரி ரகுராம்
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’புதுப்பேட்டை’. இந்த படம் வெளிவந்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தனுஷின் நடிப்பை மெருகேற்றிய படங்களில் ’புதுப்பேட்டை’ படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் செல்வராகவன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குநரும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் ’புதுப்பேட்டை’ படத்தில்தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக நடிக்க முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ’புதுப்பேட்டை’ படத்தில் சினேகா நடித்த கேரக்டரில் முதலில் காயத்ரி ரகுராம் தான் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும் அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் அதனை அடுத்து தான் சினேகா இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் ’புதுப்பேட்டை’ திரைப்படத்தில் காயத்ரி ரகுராம் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கற்பனை செய்து பதிவு செய்துள்ள கமெண்ட்ச்கள் ரசிக்கும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.