“ஒவ்வொரு முறை உடை மாற்றும் போதும் இதை பண்ணுவேன்..” பூர்ணா ஓப்பன் டாக்..!
தமிழ் சினிமாவின் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை பூர்ணா. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு வெற்றிகரமான படங்களில் நடித்திருக்கிறார்.
பல்வேறு கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து அசத்தியிருக்கும் இவர் காமெடி காட்சிகளாக இருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் கிளாமரான காட்சிகள் என இருந்தாலும் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று இயல்பாக நடிக்கும் வல்லமை பெற்றவர்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூர்ணா ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டார்.
நடிகர் விஜய் ஒரு மேடையிலேயே பூர்ணாவின் அழகை வர்ணித்தார். அதாவது நடிகை அசின் மற்றும் நடிகை ரேவதி இதுவரையும் சேர்ந்து செய்த ஒரு கலவைதான் நடிகை பூர்ணா என பேசி இருந்தார் நடிகர் விஜய்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் படுமோசமான கிளாமர் காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். கொரோனா காலத்தின் போது துபாய் தொழிலதிபர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரிடம் வசமாக சிக்க இருந்தார் நடிகை பூர்ணா என்பது வரலாறு.
தன்னை துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் என்றும் பல்வேறு எண்ணெய் கிணறுகள் மற்றும் தங்க நகை கடைகளை நிர்வகித்து வரும் உரிமையாளர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்ய முயற்சி செய்திருக்கிறார் ஒரு நபர்.
கிட்டத்தட்ட திருமணம் வரை அந்த நபர் சென்றுவிட்ட நேரத்தில் அவரைப் பற்றி உண்மையை விசாரித்த போது திடுக்கிட்டார் நடிகை பூர்ணா. கேரளாவில் ஒரு சந்து கடையில் செல்போன்களுக்கு டெம்பர்டு கிளாஸ் ஒட்டக்கூடிய நபர்தான் இந்த நபர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக இப்படி ஒரு மோசடி டிராமாவை அரங்கேற்றிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து நூல் நிலையில் தப்பினார் நடிகை பூர்ணா. இது அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த ஆடை அணிந்தாலும் கச்சிதமாக பொருந்துகிறது. நீங்கள் ஒல்லியாக இருக்கும்போதும் சரி உடல் எடை கூடிய பிறகும் சரி எந்த ஆடையாக இருந்தாலும் கட்சிதாமாக பொருந்துகிறது.
மட்டுமில்லாமல் அந்த ஆடையில் நீங்கள் மிகவும் அழகாக தெரிகிறீர்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? அந்த ரகசியம் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை பூர்ணா. அதன் பிறகு பெரிய ரகசியம் ஒரு ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் எந்த ஆடையை அணியும் போதும் அணிந்தாலும் “அன்று என்னுடைய மிகவும் சிறப்பான நாள்” என்ற எண்ணத்தை என்னுடைய நெஞ்சில் வைத்திருப்பேன்.
ஒரு தீபாவளி.. ஒரு ஓணம்.. நம்முடைய பிறந்தநாள்… நம்முடைய திருமண நாள் போன்ற நாட்களில் நாம் புத்தாடை அணியும் பொழுது எப்படி மகிழ்ச்சியான மனநிலையில் இருப்போமோ.. அதே மகிழ்ச்சியை நான் ஒவ்வொரு முறை ஆடை அணியும் போதும் என்னுடைய மனதில் வைத்திருப்பேன் என பேசி இருக்கிறார் நடிகை பூர்ணா.