அவரும் போய்ட்டாரு.. என் மகளும் போய்ட்டா.. வாழ்க்கையை முடிச்சிக்க நினைச்சேன்.. கண்கலங்கிய மௌனிகா!
ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றி முதல் படம் முள்ளும் மலரும். இதைத் தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு, அழியாத கோலங்கள் படத்தை இயக்கினார். அதன் பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம் என 15 படங்களை இயக்கினார். பாலு மகேந்திராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை மௌனிகா 1998 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மௌனிகா அளித்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அக்கா மகள் உதயா விபத்தில் உயிரிழந்தது குறித்து கண்ணீர் மல்க பேசி உள்ளார். கடவுள் என்னை ஏன் இப்படி துரத்துகிறோர் என்று தெரியவில்லை. 2014ம் ஆண்டு அவர் இறந்தார். 2018ம் ஆண்டு என் மகள் என்னை விட்டு போய்விட்டால், பாலு என் வாழ்க்கையில் வரும் போது, என் பெரிய அக்காவின் கருவில் அவள் தரித்தால். இவர் இறந்து 3 வருடம் கழித்து, ஒரு விபத்தில் அவள் இறந்துவிட்டாள். என்னுடைய அக்கா, மகளை கருப்பையில் சுமந்தாள், நான் அவளை, என் மனதில் சுமந்தேன். அவள் இறந்த பிறகு இதற்கு மேல் வாழவேக்கூடாது என்று என் கதையை முடித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால், என் மகள் அவளின் இரண்டு குழந்தைகளை என்னை நம்பி விட்டுவிட்டு போய்விட்டால், நானும் தவறான முடிவு எடுத்தால், அந்த குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும் என யோசித்தேன்.
நான் பாலு மகேந்திராவுடன் வாழ்ந்த போது, இரண்டு முறை கர்ப்பமானேன், ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக அதை களைத்துவிட்டேன். அந்த கருவில் களைந்த இரண்டு குழந்தையாகத்தான், என் மகளின் குழந்தைகளை நான் பார்க்கிறேன், என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனாது என்று தெரியவில்லை. என் மகள் உதயா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அவளுக்கும் எனக்கும் சண்டை, இதனால் நான் அவளிடம் பேசவில்லை. சண்டை சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், கடைசி வரை அவளுடன் பேசமுடியாமலே போய்விட்டது. அந்த சண்டையை மறந்துவிட்டு நான் பேசி இருக்கலாம் என்று தினமும் நினைத்து அழுவேன், அந்த ஆன்மாவிற்கு சாரியை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என மௌனிகா அந்த பேட்டியில் கண் கலங்கி பேசி உள்ளார்.