அந்த விஷயம் நடந்தது.. 2 வருடம் என் கணவர் வீட்டில் இருந்தார்.. முதல் முறையாக கூறிய குஷ்பூ

அந்த விஷயம் நடந்தது.. 2 வருடம் என் கணவர் வீட்டில் இருந்தார்.. முதல் முறையாக கூறிய குஷ்பூ

நடிகை குஷ்பூவின் கணவரும் பிரபல இயக்குனருமானவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அன்பே சிவம்.

இப்படம் குறித்து குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்..

"அன்பே சிவம் படத்தையெல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் எடுத்த பின் என்னுடைய கணவர் சுந்தர் சி 2 ஆண்டுகளாக வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தார். ஆனால் இப்போது அந்த படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்".

"இந்த படம் ரிலீசான சமயத்தில் தியேட்டரில் போய் பார்த்து வெற்றி பெற வைத்திருந்தால் என் கணவர் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டாரு. ஆனால் எது நடந்தாலும் நன்மை என சொல்வோம். அந்த மாதிரி அன்பே சிவம் ஓடவில்லை என்றாலும் நன்மைக்கே என எடுத்து கொள்ள வேண்டும்".

"ஏனென்றால் அந்த படத்திற்கு பின் தான் நாங்கள் எங்களுடைய அவ்னி கிரியேஷன்ஸ் சொந்த தயாரிப்பு நிறுவனமான துவங்கினோம். அன்பே சிவம் மட்டும் ஓடியிருந்தால் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கவே மாட்டோம். சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்களில் அன்பே சிவம் மிக முக்கியமான படம் அந்த படத்துக்காக அவர் ஒவ்வொரு Frame-க்கும் உழைத்தார்" என குஷ்பூ கூறினாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES