பிரேம்ஜி திருமணத்திற்கு வராத இளையராஜா!! தம்பி மகனுக்காக இப்படியொரு விஷயத்தை செய்தாரா

பிரேம்ஜி திருமணத்திற்கு வராத இளையராஜா!! தம்பி மகனுக்காக இப்படியொரு விஷயத்தை செய்தாரா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரேம்ஜி சமீபகாலமாக 44 வயதாகியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பாடகி ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன் பிரேம்ஜிக்கும் இந்து என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

சினிமா சம்மந்தம் இல்லாத பெண் தான் இந்து என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சிறப்பாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இளையராஜா வராமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளாகியது. 

இந்நிலையில் இளையராஜா வராத காரணம் என்ன என்ற தகபலை சினிமா சிமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார். பிரேம்ஜி திருமணம் செய்துள்ள பெண் இந்து வங்கியில் வேலை பார்ப்பவர். இன்ஸ்டாகிராம் மூலமாக தான் இவர்களின் அறிமுகம் ஆரம்பித்து பின் காதல், திருமணமாக மாறியிருக்கிறது. திருமணத்திற்கு பின் சைவத்திற்கு மாறியிருக்கிறார். 

இளையராஜா, பிரேம்ஜியையும் மணமகளையும் திருமணத்திற்கு முன்பே வீட்டிற்கு வரவழைத்து விருது கொடுத்து பரிசையும் வழங்கியிருக்கிறார். வெளிநாட்டில் நடக்கும் கான்சர்ட்டில் இருப்பதால் தான் இளையராஜாவால் வரமுடியாத நிலை ஏற்பட்டியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES