பள்ளியில் படிக்கும் போதே முதன் முதலாக அது நடந்துடுச்சு.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட பிரியங்கா மோகன்..!
தமிழில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. டீன் ஏஜ் வயது மாணவிகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்றும் விற்கும் கடத்தல் கும்பல் பற்றிய கதை.
வழக்கமான அரைச்ச மாவுதான் என்றாலும், கதையை காமெடியாக சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அழகு தேவதையாக வந்த பிரியங்கா மோகனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து நடிகை பிரியங்கா மோகன் பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகவில்லை. அதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை.
இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில், தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வசூலை குவித்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். அப்போது அந்த தொகுப்பாளர், பிரியங்கா மோகனிடம் உங்களுக்கு பர்ஸ்ட் கிரஷ் ஏற்படுத்திய நபர் பெயரை சொல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பினர்.
உண்மையை சொல்லவில்லை என்றால், உங்கள் முன்னால் வைத்திருக்கும் ஜூஸை குடிக்க வேண்டும் என்கிறார்.
அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், பேர் சொல்ல மாட்டேன். ஆனால், ஸ்கூலிலேயே அது இருந்தது. ஆனால் பெயர் மட்டும் சொல்ல முடியாது.
கண்டிப்பாக பெயர் சொல்ல முடியாது. ஆனால் அது ஸ்கூலில் நடந்தது என்கிறார்.
அதற்கு தொகுப்பாளர் பேர் சொல்லுங்க, பேர் சொல்லுங்க என்கிறார்.
அதற்கு பிரியங்கா மோகன், பேர் சொல்ல முடியாது, ப்ளீஸ் என்கிறார்.
அப்ப ஜூஸை குடிங்க, சரி ஓகே என்று சிணுங்கியபடி அந்த ஜூஸை எடுத்து, ப்ரியங்கா மோகன் குடிக்கிறார். பின்பு, இப்போது அவர் என்ன பண்ணிட்டு இருக்காருன்னு கூட தெரியலை என்று சிரித்தபடி சொல்கிறார்.
பள்ளியில் படிக்கும் போதே முதன் முதலாக கிரஷ் நடந்துடுச்சு. நேர்காணலில் கூச்சமின்றி ஒப்புக்கொண்ட பிரியங்கா மோகன், கடைசி வரை பெயரை சொல்லாமல், ஜூஸ் குடித்து தப்பித்துக்கொண்டார்.
அந்த நேர்காணல் வீடியோ கிளிப்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.