ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு இசையால் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு இசையால் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் இந்தியாவிலிருந்து 117 பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் அதில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் இசை வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இசையால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES