பாலிவுட் காதல் வதந்தி.. தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

பாலிவுட் காதல் வதந்தி.. தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

சென்னை: தமிழ் திரையுலகின் எவர்கிரீன் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர், தற்போது முதன்முறையாகத் தமிழில் நேரடி என்ட்ரி கொடுக்கத் தயாராகி வருகிறார்.

கிசுகிசுக்கும் பாலிவுட்: சினிமா வாய்ப்புகள் ஒருபுறம் குவிந்தாலும், ஜான்வி கபூரின் காதல் வாழ்க்கை தான் எப்போதும் பாலிவுட்டின் ஹாட் டாபிக். மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவும், ஜான்வி கபூரும் தீவிரமாகக் காதலித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் பல்வேறு பாலிவுட் பார்ட்டிகள், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது, குடும்ப விசேஷங்களில் பங்கேற்பது மற்றும் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீகக் கோயில்களுக்கு ஒன்றாகச் சென்று வருவதால், அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறது. இதுவரை தங்களது உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் வெளியாகும் இவர்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இவர்களது திருமணக் காதலை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளன.

Sridevi Janhvi Kapoor

பா ரஞ்சித் - சற்குணம் கூட்டணி: இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தமிழ் ஓடிடி தளத்தில் அறிமுகமாகவிருக்கும் புதிய வெப் தொடர் குறித்த தகவல் கசிந்துள்ளது. 'களவாணி', 'வாகை சூட வா' போன்ற எதார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் 'குரத்தி' என்ற வெப் தொடரில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மிகவும் அழுத்தமான மற்றும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இந்த தொடரை இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தி சர்ச்சை: தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவரா' படத்திற்குப் பிறகு, ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சிக்காக மட்டுமே ஜான்வியை பயன்படுத்தியதாக இணையத்தில் கடும் விமர்சனம் எழுத்தத்தை அடுத்து, பெத்தி பட இயக்குநர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES