மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி 2K கிட்ஸுகள் பலரின் இன்ஸ்பிரிஷனாக சினிமாவில் கலக்கி வந்த இவர், நடிப்பிலும் இயக்கத்திலும் களம் இறங்கி கலக்கிய படம் மீசைய முறுக்கு, தற்போது மீண்டும் இந்த ஜென் சி-காக மீசைய முறுக்கு 2-வுடன் களத்தில் இறங்க இதுவும் முதல் பாகத்தின் வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
ஹிப் ஹாப் ஆதி 1970-களில் கர்நாடக சங்கீதமி அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்ய, ஆதி தன் கானா மூலம் மிகப்பெரிய கலைஞன் ஆக போராட், ஆனால் அனைத்து இடங்களிலும் கானாவை ஒதுக்குகின்றனர்.
அங்கிருந்த கதை தற்போது இருக்கும் கால கட்டதிற்கு வர, ஆதி, ஹர்ஷத் கான் DJ மற்றும் துணை நடிகர்களாக தங்களுக்கான அங்கீகாரத்துகாக போராடி வருகின்றனர்.

அந்த போராட்டத்தின் போது ஒரு பெரிய தயாரிப்பாளர் மகனிடம் மோதும் நிலை உருவாகிறது, இருவரும் ஒரே பெண்ணை காதலிக்க, அப்போது இருவரும் அடிதடி வரை சென்று போலிஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.
அங்கிருந்து கதை 1990-க்கு செல்ல இந்த மூன்று ஜெனரேஷனிலும் ஆதிக்கு என்ன ஆனது, அவர் தடைகளை தாண்டி சாதித்தாரா என்பதை இன்றைய ஜென் சி-க்கு ஏற்றவாறு சொல்லியிருப்பதே இந்த மீசைய முறுக்கு 2.

படத்தை பற்றிய அலசல்
ஆதி 3 ஜெனரேஷனை கண்முன் கொண்டு வருகிறார், தாஸ், டைகர் சிவா, ஜீவா என 3 காலகட்டங்களில் அவரின் ரோல் கச்சிதமாக கலக்கியுள்ளார், அதிலும் தாத்தாவாக கருணாஸ், பாபா பாஸ்கர் மாஸ்டரை அப்பாவாக கொண்டு வந்த ஐடியா சூப்பர்.
முதல் பாதி முழுவதும் இன்றைய ட்ரெண்ட் இன்றைய ஜென் சி-யை கவரும் அத்தனை அம்சமும் நிரம்பி வழிகிறது, அதிலும் விஜய் வரதராஜ், ஷாரா, ஹர்ஷத் கான், யோகிபாபு என அனைவருமே தங்கள் ஒன் லைன் மேனரிசம் என கலக்கியுள்ளனர், அதிலும் ஆங்காங்கே வரும் மீசைய முறுக்கு பர்ஸ்ட் பார்ச் ரெபரன்ஸ் சூப்பர்.

ஆனால் எத்தனை ஜாலி வைப் காமெடி பாடல்கள் என இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கதைக்குள் போகாமல் இதையே சுற்றிகொண்டு இருப்பது கொஞ்சம் திகட்ட ஆரம்பித்து விடுகிறது முதல் பாதி, இடைவேளை டுவிஸ்ட் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஹீரோயின்களில் ரம்யா ரங்கநாதன் மனதை கவர்கிறார், இரண்டாம் பாதியில் டைகர் சிவா கதாபாத்திரம் செம எமோஷ்னலாக இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறது. அதிலும் அப்பா-மகன் எமோஷ்னல் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம், அதே நேரத்தில் படத்தின் வசனங்கள், ரேஸை ஒன்றாக ஆரம்பித்தால் தான் அது பெயர் ரேஸ், ஒரு கிரவுண்ட் கட்டி அதுக்குள்ள அவுங்க மட்டும் விளையாட்றது என்ன ரேஸ்? போன்ற வசனங்கள் இன்றைய தலைமுறை கொண்டாடும்படி உள்ளது.

அதே நேரத்தில் படத்தில் காமெடிகாக சிலரை கிண்டல் செய்வது போல் வரும் காட்சிகள் அதற்கு ஆதியே விளக்கம் கொடுப்பது என பேலன்ஸ் செய்வதற்கு வைத்த காட்சிகள், ஏதாவது ஒரு பக்கம் நில்லுங்கப்பா என்றே உள்ளது, மேலும் சமீபத்திய ஒரு இசையமைப்பாளரை தாக்குவது போல் வரும் சில வசனங்கள் ரசிகர்கள் கனேக்ட் ஆகி கைத்தட்டினாலும், இணையத்தில் சூடான விவாதம் வருவதை தவிர்க்க முடியாது.
டெக்னிக்கலாக மீசைய முறுக்கு அளவிற்கு பாடல்கள் இல்லை என்றாலும், 3 பாடல்கள் செம வைப் தான், பின்னணி இசை குறிப்பாக முதல் பாதி கொஞ்சம் சத்தத்தை குறைத்திருக்கலாம், ஒளிப்பதிவு செம கலர்புல் தான்.
க்ளாப்ஸ்
- ஹிப்ஹாப் ஆதி மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் , நடிகைகளில் ரம்யா மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.
- இரண்டாம் பாதி எமோஷ்னல் காட்சிகள்
பல்ப்ஸ்
- படத்தின் முதல் பாதி கதைக்குள் போகாமல் காமெடியே நம்பி சென்றது ஒரு கட்டத்திற்கு மேல் முடியல.
- படம் மீசைய முறுக்கு முதல் பாகத்தின் டெம்ப்ளேட்டுக்குள் சிக்கி இதுதான் நடக்க போகிறது என்ற காட்சிகள்.
மொத்தத்தில் முதல் பாதி Fun, இரண்டாம் பாதி Emotions இதில் Fun ஓவர்டோஸ் ஆகி சோதித்தாலும், Emotions க்ளிக் ஆனதால் கண்டிப்பாக இத முறையும் மீசையை முறுக்கி விடலாம்.
