என் மகனின் வாழ்க்கையே போச்சி!! நம்ப வைத்து ஏமாற்றிய வடிவேலு!! கதறும் தயாரிப்பாளர்..

என் மகனின் வாழ்க்கையே போச்சி!! நம்ப வைத்து ஏமாற்றிய வடிவேலு!! கதறும் தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து தற்போது இன்றைய தலைமுறையினராலும் தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் தான் வடிவேலு. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த வடிவேலு, சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகினார். விஜயகாந்த் பற்றி தவறாக பேசியது உட்பட பல காரணங்களை கூறி வடிவேலுவுக்கு ரெட் கார்ட் வழங்கி நடிக்க தடை வித்தார்கள். அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த வடிவேலுவை, அவருடன் ஒன்றாக பயணித்த சக நடிகர் நடிகைகளே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் வி சேகர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வடிவேலு செய்த நம்பிக்கை துரோகம் பற்றி பகிர்ந்துள்ளார். அரசியல் காரணமாக விஜயகாந்தை மேடையில் வடிவேலு கீழ்த்தரமாக பேசினார். ஆனால் விஜயகாந்த் அவருக்கு உதவிகளை செய்திருக்கிறார். அப்படி அவர் மோசமாக பேசியதில் நானும் பாதிப்படைந்து இருந்திருக்கிறேன். சரவணப் பொய்யன் என்ற படத்தினை நான் இயக்கினேன்.

அதில் என் மகன் கதாநாயனாக நடிக்க வைக்க இருந்தேன். ஆனால் அந்த படத்தில் வடிவேலுவை முக்கிய ரோலில் நடிக்க சொல்லி கேட்டதாகவும் அதற்கு வடிவேலு ஒப்புக்கொண்டும் இருந்தார். என்னை எப்படி தூக்கிவிட்டீர்களோ அதேபோல் உங்கள் மகனையும் தூக்கிவிடுகிறேன் என்று கூறினார் வடிவேலு. நானும் அவர் பேச்சை கேட்டு பட வேலைகளை ஆரம்பித்தேன்.

அதன்பின் அரசியலுக்கு சென்ற வடிவேலு விஜயகாந்தை பற்றி தவறாக பேசினார். அப்போது திமுக தோல்வியடைய அடுத்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் திரும்பவும் மதுரைக்கு சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவேமாட்டேன் என்று வடிவேலு பயத்தில் சொன்னதாக வி சேகர் கூறினார். அதன்பின் என் மகனின் படத்தில் விவேக், கருணாஸை வைத்து படத்தை எடுத்து முடித்தேன் என கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES