நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்...

நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்...

ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நண்பன்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டோர் நண்பர்களாக நடித்திருந்தனர். மேலும் இலியானா கதாநாயகியாக நடிக்க சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் | Popular Actor Is First Choice For Nanban Movie

ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நண்பன் என்பதை நாம் அறிவோம். ஆனாலும், அதை சிறப்பாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர்.

இன்று வரை தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான டாப் 10 படங்களில் கண்டிப்பாக நண்பனும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நண்பன் படத்தில் மிகமுக்கியமான ஸ்ரீவட்சன் எனும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யன் கிடையாதாம்.

நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் | Popular Actor Is First Choice For Nanban Movie

 

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தான் சத்யன் நடித்திருந்த ஸ்ரீவட்சன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால், திடீரென அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

அதன்பின் தான் அவருக்கு பதிலாக சத்யன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES