தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அதை செய்றார்!! புலம்பித்தள்ளும் நடிகை மகாலட்சுமி..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி சங்கர். சில ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் சீரியல் நடித்து வந்த மகாலட்சுமி ஏற்கனவே திருமணமான நடிகர் ஈஸ்வருடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கினார். முதல் மனைவி கொடுத்த புகாருக்கு பின் அவரைவிட்டு விலகினார்.
கடந்த ஆண்டு தயாரிப்பாளரும் ஃபேட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமணத்தை பலர் கேலி செய்ததை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிறப்பாக வாழ்ந்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் வருட திருமண நாள் கொண்டாடிய அடுத்த சில நாட்களில் பணமோசடியால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.
ஒரு மாதம் கழித்து வெளியில் வந்த ரவீந்தர் தன் மனைவி தனக்கு எப்படி சப்போர்ட் செய்கிறார் என்பதை எமோஷ்னலாக பகிர்ந்து தற்போது பிக்பாஸ் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை மகாலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரவீந்தர் பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார்.
அதில் அவரின் உடல் எடையை குறைக்க நாங்கள் பலவற்றை முயற்சி செய்தோம், ஆனால் முறையான டயர்ட்டை அவர் பின்பற்றுவதும் கிடையாது. அவருடன் இருக்கும் போது என் டயட்டை பின்பற்ற முடியாது என்றும் நான் டயட்டை பின் தொடரும் போது, நான் தூங்கிக்கொண்டிருந்தாலும் என்னை எழுப்பி சாப்பிட வைத்துவிடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே என்னாலும் டயட்டை மெயிண்டையின் செய்யமுடியவில்லை, நான் அதிகமாக சாப்பிடமாட்டேன், ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் வயிறு முட்ட சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதனால் தான் வார இறுதி ஞாயிற்று கிழமை வெளியில் சென்று ஓட்டலில் சாப்பிட்டு போட்டோஸ் போடுகிறீர்களா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.