37 வயதில் நடிகருடன் இரண்டாம் திருமணம்!! 2-ஆம் தாராம்-ஆகி அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை ஸ்ரித்திகா...

37 வயதில் நடிகருடன் இரண்டாம் திருமணம்!! 2-ஆம் தாராம்-ஆகி அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை ஸ்ரித்திகா...

சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ஸ்ரித்திகா. நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண பரிசு2 அழகு, மகராசி, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார் ஸ்ரித்திகா. தற்போது தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரித்திகா, கடந்த 2020ல் சனிஸ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அவரை போல் சீரியல் நடிகர் ஆர்யன், நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

சமீபத்தில் நடிகை ஸ்ரித்திகா 3 வருடங்களுக்கு முன் எனக்கு விவாகரத்து ஆனதாகவும் விரைவில் மகராசி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் ஆர்யனை திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ரித்திகா.

சமீபகாலமாக இணையத்தில் ஆர்யனுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வந்ததால் அதை பலர் கேள்விகளை கேட்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளித்து கூடிய சீக்கிரம் பதிவு திருமணம் செய்யவுள்ளதாக கூறி ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரித்திகா. 

மேலும் விரைவில் சனிஸ் என்ற பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டு ஆர்யன் பெயரை சேர்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது ஆர்யனை திருமணம் செய்து கரம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. அவர்களின் திருமணம் புகைப்படம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES