'தளபதி 66' படத்தில் வம்சியுடன் இணையும் தமிழ் இயக்குனர்!

'தளபதி 66' படத்தில் வம்சியுடன் இணையும் தமிழ் இயக்குனர்!

தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் ’தளபதி 66’ படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே

’தளபதி 66’ திரைப்படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும், தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக விஜய்யின் சம்பளம் நூறு கோடிக்கும் மேல் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ராஜுமுருகன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் தமிழ் பகுதி வசனங்களை ராஜூமுருகன் எழுதுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும், பிரவீண் கே.எல். படத்தொகுப்பாளராக பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு சில வாரங்களிலேயே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\

இதையும் படியுங்கள் : குட்டி விமானத்தில் மாலத்தீவை ரவுண்ட் அடிக்கும் ஆண்ட்ரியா: அட்டகாசமான வீடியோ!

LATEST News

Trending News

HOT GALLERIES