பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தை செய்தேன்!! ரஜினி பட பேட்டி..
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சோனாக்ஷி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சோனாக்ஷி சினிமாவில் தனக்கு நடந்த அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் கலைஞர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் நம்மை கவனிப்பார்கள், விமர்சனம் செய்வார்கள். ஆனால் அதை எல்லாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு சிறிய வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு பெரிய பட வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்று உறுதி உடன் இருந்தேன். அதனால் சிறிய வேடம் என்பதை நினைக்காமல் அதை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.