நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என கிடக்க வைத்த இயக்குனர்.. இப்ப புலம்பி என்ன பண்ண..!
சினிமா உலகம் என்றாலே பளபளப்பு, புகழ், பணம் என்று பொதுமக்கள் கற்பனை செய்தாலும், அதன் திரைமறைவில் நடக்கும் சில சம்பவங்கள் அந்த பிம்பத்தை உடைத்து, அங்கு நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம் என்பதை உணர்த்துகின்றன.
பணத்திற்காகவும், புகழ் வெளிச்சத்திற்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் பதிந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அவ்வப்போது வெளிவரும் சம்பவங்கள் சினிமாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகின்றன.
அப்படியொரு சம்பவமாக, மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்துபோன ஒரு நடிகையின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நடிகை ஒருவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பல பேட்டிகளில், அந்த நடிகரின் ‘பர்ஃபாமென்ஸ்’ பற்றியும், வேறு நடிகர்கள் அதற்கு சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள், சினிமாக்காரர்கள் என்றாலே எதையும் செய்யத் துணிவார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து, அவர்களின் பார்வையை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொதுமக்கள் பெரும்பாலும் நடிகைகளை மட்டுமே குறைகூறுகிறார்கள். ஆனால், “வாய்ப்பு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கூறி, தங்கள் காம இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்தும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை.
இந்த சூழலில், மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை தனது பதின்ம பருவத்தில் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து, கதையை முழுமையாகக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், இயக்குநர் படத்தில் பலான காட்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். “அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு” என்று பதறிய நடிகையை, “இந்த படத்தில் நடித்தால் விருதுகளும் பாராட்டுகளும் குவியும்” என்று இயக்குநர் சமாதானப்படுத்தி, நடிக்க வைத்துள்ளார்.
இங்கே தான் நடிகை தவறு செய்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பு பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளது.
மேலும், ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் “நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி, நடிகையை இயக்குநர் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். வலியை பொறுத்து, அவரது அத்துமீறல்களை அமைதியாக சகித்து நடித்துள்ளார் நடிகை. படம் முடிந்து, இறுதியாக வெளியான பதிப்பைப் பார்த்தபோது, எடுக்கப்பட்ட பலான காட்சிகளில் பாதி கூட இல்லை.
“என்ன சார், எடுத்தது பாதியில கூட இல்லையே?” என்று கேட்டதற்கு, “சென்சாரில் தூக்கிவிட்டார்கள்” என்று இயக்குநர் சாதாரணமாக பதிலளித்து, நடிகையை அமைதிப்படுத்தியுள்ளார்.
இப்போது அந்த நடிகை இதுகுறித்து புலம்பி வருவதாகவும், அதைக் கேள்விப்பட்டவர்கள் “இப்போது புலம்பி என்ன பயன்?” என்று கேலி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம், சினிமாவில் புதிதாக வருபவர்களை எவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகைகள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் பேசுகிறார்கள்; பலர் பட்டும் படாமலும் மழுப்பிவிடுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள், சினிமாவை நம்பி வரும் இளம் திறமைகளுக்கு எச்சரிக்கையாகவும், பொதுமக்களின் எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றன.