அந்த நடிகரை போல் தான் கணவர் வேண்டும்.. விவாகரத்துக்கு.. நடிகை திரிஷா ஓபன் டாக்.

அந்த நடிகரை போல் தான் கணவர் வேண்டும்.. விவாகரத்துக்கு.. நடிகை திரிஷா ஓபன் டாக்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா. இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் கூட அதே அழகுடன் இன்றும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

திரிஷா நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளிவந்தது. கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த நடிகரை போல் தான் கணவர் வேண்டும்.. விவாகரத்துக்கு.. நடிகை திரிஷா ஓபன் டாக் | Trisha About Her Future Husband And Marriage

மேலும் அடுத்ததாக கமலுடன் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி பிசியாக வலம் வரும் நடிகை திரிஷா 40 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.

இதில் 'எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. ஆனால், திருமணம் குறித்து நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை' என கூறியுள்ளார்.

அந்த நடிகரை போல் தான் கணவர் வேண்டும்.. விவாகரத்துக்கு.. நடிகை திரிஷா ஓபன் டாக் | Trisha About Her Future Husband And Marriage

மேலும், 'அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்' என நடிகை திரிஷா கூறியுள்ளார். இது பழைய பேட்டி என்றாலும் கூட திடீரென தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES