வாய்ப்பே கிடைக்கல! கடுப்பில் கும்பிடுபோட்டு அக்கடதேசம் புறப்பட்ட வாரிசு நடிகை..
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் அந்த வாரிசு நடிகை. ஆரம்பத்தில் பெரியளவில் வருவார் என்று எதிர்ப்பார்த்த நம்பிக்கை கொடுக்காமல் இருந்து வருகிறார். வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்து பின் ஜோடியாக நடித்து கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
தமிழ் தான் கைகொடுக்கவில்லை அக்கடதேசத்திலும் கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று சென்ற அம்மணி ஒருசில காலங்களிலேயே மீண்டும் முன்னணி நடிகர் படத்தில் வில்லியாக நடித்தார். தற்போது தமிழில் போதியா வாய்ப்பு கதாநாயகியாக கிடைக்காமல் இருந்த நிலையில் மீண்டும் அக்கடதேசம் அழைத்துள்ளதாம்.
தெலுங்கில் அவருக்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களும் கிடைத்து வருவதால் அவருடைய நடிப்பும் மெருகேறிக் கொண்டே செல்கிறது எனவும், தற்போதைக்கு தெலுங்கு சினிமாவை பொறுத்தவரையில் வரலட்சுமி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என அனைத்து தயாரிப்பாளர்களும் நம்பிக்கை கொடுத்து விட்டாராம். மக்கள் செல்வன் கமிட்டாகி பேச்சு வார்த்தை நடத்திவரும் 60 வயதான் நடிகரின் படத்திலும்நடித்து வருவதால் அம்மணி ஹைதராபாத்திலேயே செட்டிலாகவுள்ளாராம்.