ஆக்ரோசமாக சண்டை போடும் நடிகை ஸ்ருதிஹாசன்.. வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
நடிப்பை தாண்டி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது.
தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பயங்கர ஆக்ரோசமாக அவர் பயிற்சி செய்கிறார். பின்பு காலால் சண்டை போடும் காட்சி என அனைத்தும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.