குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு!! கிளாமர் குயினை களமிறக்கும் சன் டிவி..

குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு!! கிளாமர் குயினை களமிறக்கும் சன் டிவி..

தொலைக்காட்சி சேனல்கள் பொறுத்தவரையில் தங்களுக்கு போட்டியாக இருக்கும் சேனல்களில் டாப் இடத்தினை பிடிக்கும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அப்படியே காப்பி அடித்து தங்களின் சேனல்களில் ஆரம்பிப்பார்கள்.

அப்படி தான் சமீபகாலமாக சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் இடையே போட்டி நிகழ்ந்து வருகிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பித்த விஜய் டிவியை போல் சன் தொலைக்காட்சியும் ஆரம்பித்தது. தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியை போன்று டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. 

விஜய் டிவியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு வந்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் யார் யார் டூப், யார் யார் டாப் என்ற விவரத்தை வீடியோ பிரமோ மூலம் அறிவித்துள்ளார்கள். முக்கியமாக கேபிஒய் பாலா, கோமாளி மோனியா, சூப்பர் சிங்கர் பரத், தீபா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சற்று ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சி குயில் நடிகை ஒருவரை இறக்கியிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தாவை தான். மேலும் சூப்பர் சிங்கர் சிவாங்கியின் தயார், பின்னி கிருஷ்ணகுமார், சிங்கம்புலி, நடிகை சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES