ஒரே இரவில் நடிகையால் நாசமான அப்பாஸ்.. காலில் விழ வைத்து.. போதை பழக்கத்தை ஊட்டிய நடிகை..!
ஒரு காலத்தில் நடிகர்கள் விஜய் அஜித் ரேஞ்சுக்கு சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு பட வாய்புகள் குவிந்து வந்தன.
காய்ந்த மாடு கம்பில் புகுந்த கதையாக தனக்கு வந்த அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கான அட்வான்சையும் பெற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் அப்பாஸ்.
கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் அப்பாஸ். ஆனால், அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமையவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாக இருந்த அப்பாஸிற்கு நெருக்கடி ஏற்பட்டது.
சில தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டும் அப்பாஸ்-ஐ தொந்தரவு செய்து இருக்கிறார்கள். ஆனால், நான் நடிப்பதற்கு தயாராக தான் இருக்கிறேன். நீங்கள் தான் படத்தை தயாரிக்கவில்லை.
என் மீது தவறு இருந்தால் தானே அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர முடியும். உள்ளிட்ட பஞ்சாயத்துகளும் அப்பாஸ் வாழ்க்கையில் நடைபெற்று இருக்கின்றன.
குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்திருந்தார் நடிகர் அப்பாஸ். அதே போலத்தான் சக சினிமா நடிகைகளும் அப்பாஸ் மீது ஈர்ப்புடன் இருந்திருக்கிறார்கள். சினிமாவில் நடிகர்களை விட அதிகமான நடிகைகளை நண்பராக கொண்டவர் நடிகர் அப்பாஸ்.
இப்படி இருந்த அப்பாஸ் நடிகைகளுடன் அடிக்கடி இரவு நேர விருந்துகளுக்கு செல்வது. அவர்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்ப்பது என தன்னுடைய வேலையை விட்டுவிட்டு நடிகைகள் உடனான நட்பினால் தன்னுடைய பாதையில் இருந்து விலகி இருக்கிறார்.
ஒரு சினிமா நடிகராக நடிப்பதும் திரைப்படங்களில் பணியாற்றுவதும் தான் இவருடைய முக்கியமான வேலை. ஆனால், நட்பு என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட அப்பாஸ் அதனால் தவறாக வழி நடத்தப்பட்டார்.
அதிலும் குறிப்பாக பிரபல நடிகை ஒருவர் நடிகர் அப்பாஸிற்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார். சினிமாவில் அறிமுகமானபோது மது பழக்கம் புகைப்பழக்கும் என எந்த பழக்கமும் இல்லாத அப்பாஸ் சினிமாவுக்கு வந்த பிறகு குறிப்பாக நடிகைகளுடன் சாகவாசத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து இவரும் மது குடிப்பது புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக உடல் எடை கூடி முகமெல்லாம் உப்பி போன அப்பாஸ் ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து இருக்கிறார்.
இங்கே இருந்தால் என்னுடைய வாழ்க்கையை போதை கலாச்சாரத்தில் சீரழிந்து விடும் என்று பயந்து போன அப்பாஸ் தன்னுடைய நண்பிகளின் காழில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆளை விடுங்கப்பா சாமி.. படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று வெளிநாடுகளுக்கு சென்று பெட்ரோல் பங்கில் வேலை செய்வது மெக்கானிக் ஷாப் களில் வேலை செய்வது என தன்னுடைய குடும்பத்தை நகர்த்தி வந்து போதை பழக்கத்திலிருந்து மீட்டு தற்போது தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
து ஒரு பக்கம் இருக்காத தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியபோது நடிகை குஷ்பூ பிரபு நட்சத்திர விடுதி ஒன்றில் மது போதையில் தள்ளாடியபடி வெளியே வந்தார்.
அவரை தாங்கி பிடித்து காரில் ஏற்றிவிட்டது அப்பாஸ். இதனை மறுக்க முடியுமா..? மறுக்க முடியும் என்றால் என் மீது மான நஷ்ட வழக்கு தொடருங்கள்.. நான் கண்ணால் அந்த காட்சியை பார்த்தேன். இப்படியெல்லாம் போதை கலாச்சாரத்தில் இருந்த குஷ்பூ இன்றைக்கு மகளிர் ஆணையத்தின் தலைவி. இந்த நாடு அப்புறம் எப்படி இருக்கும்..? என்று காட்டமான கேள்வியை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.