சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த வராத கமல்ஹாசன்! இது தான் காரணம்
பிரபல நடிகர் சரத்பாபு நேற்று உடல்நலக்குறைவால் காலமானார் . அவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உள் உறுப்புகள் செயலிழந்ததால் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடந்த நிலையில் ரஜினி, சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இருப்பினும் நடிகர் கமல் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. ட்விட்டரில் மட்டும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
அவர் வராதது ஏன் என நடிகை சுஹாசினி விளக்கம் கொடுத்து இருக்கிறார். கமல் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இருப்பதால் முழு மேக்கப் உடன் அந்த கெட்டப்பில் பாதியில் வந்து செல்ல முடியாத நிலை, அதனால் தான் அவரால் வர முடியவில்லை என சுஹாசினி கூறி இருக்கிறார்.