இந்திய சினிமாவிலேயே இதுவே முதல்முறை..மீண்டும் தமிழ் சினிமாவை காப்பாற்றிய தளபதி..கெத்து காட்டும் கில்லி..!

இந்திய சினிமாவிலேயே இதுவே முதல்முறை..மீண்டும் தமிழ் சினிமாவை காப்பாற்றிய தளபதி..கெத்து காட்டும் கில்லி..!

விஜய் தற்போது GOAT பட வேலைகளில் பிசியாக இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருக்கின்றது. இதையடுத்து இப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தன் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
கடந்த சில மாதங்களாகவே தளபதி 69 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்து வந்தது. தற்போது அதற்கான விடை தெரியவந்துள்ளது. அதாவது விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எச்.வினோத் தான் இயக்குவார் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் அறிவிப்பு GOAT படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் GOAT படத்திற்கு முன்பே விஜய்யின் ஒரு படம் திரையில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தரணியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாகும்.

இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் தற்போது திரையில் ரீரிலீஸாகியுள்ளது. கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இப்படம் திரையில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய திரையுலகிலேயே மிகவும் பிரம்மாண்டமாக ரீரிலீசாகும் திரைப்படம் என்ற பெருமையை கில்லி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் கிட்டத்தட்ட 350 திரையில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இப்படம் திரையில் வெளியாகியுள்ளது. ப்ரீ புக்கிங்கும் அமோகமாக இருப்பதால் கண்டிப்பாக ரீரிலீஸில் இப்படம் வசூல் சாதனை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது.

எந்த ஒரு பெரிய நடிகர்களின் படமும் வெளியாகவில்லை. வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் தான் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீரிலீசாகி ரசிகர்களை மீண்டும் திரைக்கு வரவைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கவே யோசித்து வந்தார்கள்.

அந்த சமயத்தில் மாஸ்டர் படத்தை திரையில் வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை திரைக்கு கொண்டு வந்தார் தளபதி. அதுபோல தற்பொழுது மீண்டும் தன் படத்தின் மூலம் ரசிகர்களை விஜய் திரைக்கு வரவழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES