சம்பளம் வாங்குவதில் முதல் 3 இடத்தை பிடித்த இயக்குனர்கள்.. அட்லியை வயிறு எரிய செய்யும் இரண்டு பேர்
இன்றைய காலகட்டங்களில் ஹீரோக்கள் தான் தயாரிப்பாளர்களை உறுதி செய்கின்றனர். இவரால் இவ்வளவு காசு கொடுக்க முடியும் என்று சில தயாரிப்பாளர்கள், ஹீரோக்களின் லிஸ்டில் இருக்கின்றனர். சம்பளம், படத்தின் பட்ஜெட் என்று இது கணக்கிடப்படுகிறது.
ஹீரோக்கள் மட்டுமில்லாமல் இயக்குனர்களும் இப்பொழுது அதிக சம்பளம் வாங்குகிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். இரண்டாம் நிலை ஹீரோக்கள் 50 கோடிகள் வரை சம்பளம் பெறுகின்றனர். ஓரளவு பெயர் பெற்ற ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரிடம் குறைந்தது 100 கோடி இருக்க வேண்டும்.
ஹீரோக்களை தாண்டி அடுத்த கட்ட சம்பளம் பெறுபவர்கள் இயக்குனர்கள். அவர்கள் வாங்கும் சம்பளமும் இப்பொழுது குறைந்தது 50 கோடிக்கு மேல் ஆகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் படம் ஓடிவிட்டால் தயாரிப்பார்கள், சம்பளம் மட்டுமின்றி லாபத்திலும் இயக்குனர்கள் ஒரு தொகையை எதிர்பார்க்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ்.. ரஜினியின் கூலி படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் அவர் வாங்கும் சம்பளம் 60 கோடிகள். சிம்பு, சிவகார்த்திகேயனை விட இவருக்கு சம்பளம் அதிகம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
நெல்சன்: ஜெய்லர் 2 விற்கு நெல்சன் வாங்கும் சம்பளம் 50 கோடிகள். ஜெயிலர் முதல் பாகம் கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டால் சன் பிக்சர்ஸ் இவருக்கு இந்த சம்பளம் வழங்குகிறது. இதற்காக தி நகரில் ஒரு ஆபீஸ் போட்டு கொடுத்திருக்கிறது கலாநிதி மாறன் டீம்.
அட்லி: லோகேஷ் மற்றும் நெல்சன் கோடிகளில் புரளுவதால் அட்லியும் இப்பொழுது தன் பங்கிற்கு சம்பளத்தை உயர்த்தி விட்டார். அல்லு அர்ஜுன் படத்திற்கு 50 கோடியில் வரை கேட்கிறார். அதுமட்டுமின்றி லாபத்தில் பங்கும் கேட்கிறார் தற்சமயம் அட்லீ வாங்கிக் கொண்டிருப்பது 30 கோடிகள்.