வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜி அமரனின் 'வல்லமை' பட முன்னோட்டம்
நடிகரும் , இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' வல்லமை ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அவருடைய சகோதரரும், நட்சத்திர இயக்குநருமான வெங்கட் பிரபு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வல்லமை' எனும் திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன், திவ்யதர்ஷினி, தீபாசங்கர், முத்துராமன், சி ஆர் ரஞ்சித் , சூப்பர் குட் சுப்ரமணியன், மாதவன் , விது உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் பேசும் இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் இயக்குநர் கருப்பையா முருகன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரேம்ஜி அமரனுக்கும்- அவருடைய பிள்ளைக்கும் இடையேயான உறவும் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த உணர்வுபூர்வமான விடயங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.