பிரதர் படம் எப்படி இருக்கு!! விமர்சனம்..
நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ள படம் பிரதர். இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் படம் இன்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். ஆனால், போற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச, ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார்.
அதன்பின் ஜெயம் ரவியின் அக்கா அவனை திருத்துகிறேன் என்று கூறி தன் குடும்பத்திற்கு அழைத்துச் செல்ல, ஆனால் கதையே மாறி குடும்பம் பிரியும் நிலை ஏற்பட்டு பின் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு என்றே எடுத்த பேமிலி படமாக அமைந்துள்ளது. விடிவி கணேஷின் காமெடி, படத்தின் எமோஷ்னல் படத்தை நகர்த்தியுள்ளது.
சரண்யா பொன்வண்ணன், பூமிகா, பிரியங்கா மோகன் நடிப்பு செயற்கைத்தனத்தையே மிஞ்சியுள்ளது. நடராஜின் கேரக்டர் ஏதோ சப்போர்ட்டிங் ஆக்டர் போல் வந்தது மிகவும் வருத்தமானது. ஏன் ராஜேஸ் இவ்ளோ பழைய மசாலாவை அரைத்து வைத்துள்ளீர்கள் என்றே கேட்க தோன்றுகின்றது.
கடைசியில் பிரதர் படம் கொஞ்சம் சொதப்பல் என்றே சொல்லலாம்.